சிந்தித்துப் பார்த்தல்
சிந்தித்துப் பார்த்தல்
இயேசு சீடத்துவத்தைப் பற்றிப் போதிக்கின்றார். 'தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது' என்று சொல்கின்ற இயேசு,
'கோபுரம் கட்டும் ஒருவர்' மற்றும் 'போருக்குச் செல்லும் அரசர்' என்று இரண்டு எடுத்துக்காட்டுக்களை முன்வைக்கிறார்.
இவர்கள் வழியாக இயேசு சீடத்துவத்திற்காகச் சொல்லும் பாடங்கள் மூன்று:
அ. நிறைய சிந்தித்து முடிவெடுத்தல்
சிந்தித்து முடிவெடுத்தல் என்பது கொஞ்ச நேரம் கோயிலில் உட்கார்ந்து தியானித்து முடிவு செய்தல் அல்ல. மாறாக, எல்லாவற்றையும் ப்ளாக் அன்ட் ஒயிட்டில் எழுதுவது. எழுதியதை மேலாண்மை செய்வது.
ஆ. பாதி வழி அல்ல. முழு வழியும் செல்லல்
கோபுரம் கட்டுபவர் பாதியோடு விட்டுவிட்டால் அது அவருக்கு அவப்பெயரையும், மற்றவர்களின் கேலிப்பேச்சையும் கொண்டுவரும்.
அதுபோல, இருபதாயிரம் பேரை பத்தாயிரம் பேரை எதிர்க்கும் அரசன் பாதியோடு விட்டால் அது அவனுக்கும், அவனோடு இருப்பவர்களுக்கும் மரணமாக முடியும். ஆக, செய்வதை முழுமையாகச் செய்தல் அவசியம்.
இ. அனைத்தையும் இழக்க வேண்டும்
கோபுரம் பாதியில் நிற்க இவர் மீதப் பணத்தை தன்னுள் வைத்துக்கொண்டிருக்க முடியாது. தன்னிடம் உள்ளதை முழுமையாக இழக்க வேண்டும்.
அதுபோல, அரசனும் தன் உடைமை மட்டுமல்ல. மாறாக, தனது தன்மானத்தையும் இழந்து எதிரி அரசனுடன் பேச வேண்டும்.
இந்த மூன்றும் சீடத்துவத்தின் பாடங்கள்.
இதையொட்டியே திருவள்ளுவரும்,
'வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்' (குறள் 471)
Comments