குருத்துவத்தை சிநேகிப்போம்
குருத்துவத்தை சிநேகிப்போம்
குருக்கள் நம்மை ஆசீர்வதிக்கவும்,தனிப்பட்ட விதமாய் உரையாடவும் விரும்பும் நாம்,அவருடன் உரையாடவும்,நலம் விசாரிக்கவும் முயல்வோமே...
தலை வணங்கி சிலுவை அடையாளம் கேட்கும் நாம்,அவரின் பணிச்சுமையை தாங்கவும் முன்வருவோமே.....
நம் இல்லம் வரவில்லை என கருதும் நாம்,குடும்பத்தோடு அவரை சந்திக்க நினைப்போமே.....
நாம் விதவிதமாய் உண்ணும்பொழுது, அவரை நினைத்து அவரோடு உணவை பகிர்வோமே....
நாம் மட்டுமே வருத்தமும்,கவலையும் கொள்வதாக கருதாமல் அவர்கள் மனக்குறைகளுக்காகவும் செபிப்போமே....
நாம் ஒரு சுற்றுலா செல்கையில்,நம் தந்தையையும் நம்முடன் வர அழைப்போமே....
நமக்கு மட்டுமே குறைகளுண்டு அங்கலாய்க்காமல்,குறை காணும் நோக்கின்றி அவர்தம் நிறை கண்டு மனமகிழ்வோமே....
நமக்காக உழைக்க வந்த ஆன்மகுருவுக்காக சற்று உழைப்போமே...
நமக்காக செபிக்க வந்த அருட்தந்தைக்காக மன்றாடுவோமே...
Comments