குழந்தைகள் தினம் !

இன்று குழந்தைகள் தினம் !

சிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்!

'பேசி முட்டாள் ஆவதை விட பேசாமல் இருப்பதே புத்திசாலித்தனம்."ஜவஹர்லால் நேரு.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பிறந்தார்.

இவர் குழந்தைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவராக இருந்ததால், இவரது பிறந்த நாள் இந்திய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இவர் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் (1919), காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் (1920) மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1945) ஆகிய சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார்.

இவர் சிறந்த ஆங்கில எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் எழுதிய ஆங்கில நூல்கள் 'தி டிஸ்கவரி ஆப் இந்தியா", 'க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி" மற்றும் 'டுவார்ட்ஸ் ப்ரீடம்" ஆகியவை ஆகும்.

இவர் எழுதிய தமிழ் நூல்கள் உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு போன்றவை ஆகும்.

நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டுமுதல் மே 27, 1964ஆம் ஆண்டு வரை பிரதமராக பணியாற்றினார். இவர் 1951ஆம் ஆண்டு, இந்திய திட்டக்குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கினார்.

'இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது" என்பதை நன்கு உணர்ந்த நேரு அவர்கள், அரசாங்க உயர்கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார். நேரு அவர்கள், 1964ஆம் ஆண்டு, மே 27ஆம் தேதி மறைந்தார்.

உலக நீரிழிவு தினம்

உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 1991ஆம் ஆண்டில் சர்வதேச நீரிழிவு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இத்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
முக்கிய நிகழ்வுகள்

கூட்டுறவு வார விழா :

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு, இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களால் கூட்டுறவு வார விழா கொண்டாடப்படுகிறது. கூட்டுறவு இயக்கத்தையும், கூட்டுறவு அமைப்புகளையும் மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Comments

Popular posts from this blog

Bharat Sevak Samaj is the National Development Agency, Established in 1952 by Planning Commission, Government of India -திறன் சான்றிதழ்