எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்
நீங்கள் குழுவாழ்வில் எத்தகைய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் அவர் அறிவுறுத்தும் பண்புகள் மூன்று:
அ. சக குழு உறுப்பினர்களுக்கு இடறலாக இல்லாமல் இருத்தல்
ஆ. சக குழு உறுப்பினர்கள் மனம் வருந்தினால் மன்னித்தல்
இ. இறைவன்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருத்தல்
'
'பாவ சோதனை வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், யாரால் வருகிறதோ அவருக்குக் கேடு' என எச்சரிக்கிறார் இயேசு. ஆக, பாவம் செய்ய நான் மற்றவரைத் தூண்டும்போது அவர் பெறும் தண்டனையைவிட நான் பெறும் தண்டனை அதிகமாக இருக்கிறது. எந்தப் பாவம் என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால், கோபம், பொறாமை, ஒப்பீடு போன்ற குழு உறவுப்பிறழ்வு பாவங்களாகவும் இருக்கலாம்.
அடுத்ததாக, 'மன்னிப்பு.' ஒரு குழுவில் மற்றவர் பாவம் செய்து, அதை அவர் உணர்ந்து, மீண்டும் மீண்டும் திரும்பி வரும்போது, அவரை மன்னிப்பது இவரின் கடமையாக இருக்கிறது.
மேலும், 'நம்பிக்கை.' இறைவன்மேல் கொண்டிருக்கிற நம்பிக்கை. இந்த நம்பிக்கைதான் மற்ற இரண்டு பண்புகளின் அடித்தளமாக இருக்கிறது.
எவை இருக்கக் கூடாது?
1. குறைச்சொல்லுக்கு ஆளாகமல் இருத்தல்
2. அகந்தை
3. முன் கோபம்
4. குடிவெறி
5. வன்முறை
6. இழிவான ஊதியத்தின்மேல் ஆசை
எவை இருக்க வேண்டும்?
1. விருந்தோம்பல்
2. நன்மையில் நாட்டம்
3. கட்டுப்பாடு
4. நேர்மை
5. அர்ப்பணம்
6. தன்னடக்கம்
மேற்காணும் பண்புகளில் இருக்கக் கூடாதவை நம்மில் இருந்தால், இருக்கக் கூடியவை நம்மில் இல்லாமல் இருந்தால், கழிக்கவும், கூட்டவும் முயல்வோம்.
Comments