கர்ப்பிணிகளாயிருந்தால் இந்தத் தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும் PICME number & RCH ID


PICME number & RCH ID

அப்படியென்றால் ... ?
இது யாருக்கான தேவை ?
இது யாருக்கான  தகவல் ?

உங்கள் வீட்டிலோ / வீட்டின் அருகிலோ / நண்பர்களோ / அவர்களின் மனைவியரோ / தெரிந்த தெரியாத யாரும் .கர்ப்பிணிகளாயிருந்தால் இந்தத் தகவல்களைப் பகிர்வதில் பெருமிதமடையுங்கள் !

அவர்கள் அரசு / தனியார் மருத்துவமனைகளில் காண்பிப்பவர்களாயிருந்தாலும் பரவாயில்லை ;

எந்த மாதிரியான சமூக பொருளாதார நிலையிலிருந்தாலும் ...

#குழந்தைக்கு_பிறப்பு_சான்றிதழ்_பெற (தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் நிகழ்ந்தாலும் கூட ) கண்டிப்பாக ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் PICME (தாய் சேய் நல பதிவு எண்)எண்ணும் ஆர்.சி.ஹெச் ஐடியும் தேவை.

சமூக பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களுக்கு அரசு வழங்கி வரும் #டாக்டர்லட்சுமி_ரெட்டி_மகப்பேறு_நிதியுதவித்தொகை
₹ 18000 பெறவும் இந்த பிக்மி எண் நிச்சயமாக அவசியம்.

சரி .. இதற்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?
* வீட்டினருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை அணுகி கர்ப்ப விவரங்களைப் பதிவு செய்யலாம்.

*  102 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டும் பதிவு செய்யலாம்.

* உங்கள் வீட்டில் இருந்து கொண்டே picme.tn.gov.in/picme_public என்கிற இணையதள முகவரி மூலமாகவும் பதிவு செய்யலாம்.

* Pregnancy ஊர்ஜிதமானவுடனே அதுபற்றிய தகவலை உங்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் , நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் , அரசு மருத்துவமனைகள் , அரசு மருத்துவக் கல்லூரிகளில் பதிவு செய்யலாம்.

* அந்த பகுதி கிராம / நகர சுகாதார செவிலியரிடம் .. பதிவு செய்து கொள்ளலாம்/ செய்ய வேண்டும்.
இது நிச்சயம் உங்கள் நலனுக்காக மட்டுமே !

இதன் மூலமாக கர்ப்பம் பல இடங்களில் பதிவு செய்யப்படுவதையோ எங்கேயுமே பதிவாகாமல் விடுபடுவதையோ தவிர்க்க முடிவதுடன் ...,

கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு சமயத்தில் கணவன் வீட்டிலிருந்து தாய் வீட்டிற்கோ  அல்லது தாய் வீட்டிலிருந்து கணவர் வீட்டிற்கோ இடம் பெயர்கையிலும் அங்கேயுள்ள சுகாதார செவிலியர்கள் மூலம் தொடர் கண்காணிப்பிலும் மருத்துவ கவனிப்பு மற்றும் ஆலோசனைகளைப் பெறவும் ஏதுவாகும்.

பெருமளவில கர்ப்பகால  இழப்பு உள்ளிட்ட பலவிஷயங்களைத் தவிர்க்கவும் , High risk mothers விடுபடாமல் மேல் சிகிச்சைக்குப் பரிந்துரை பெறவும் .. எனப் பலவழிகளிலும் ...

கருவுற்ற பெண்களை அவர்களின் குடும்பத்தினருக்கு இணையான கவனிப்பையும் அக்கறையையும் தர அரசு விழைகிறது.

அந்த ₹18000 உதவித்தொகை (உதவித்தொகை பெறத் தகுதியானவருக்கு மட்டுமே ..)எதற்காக எந்தெந்த காலகட்டங்களில் தரப்படுகிறது என்பதையும் வேறொரு பதிவில் தெரிவிக்கிறேன்.

உங்கள் வீட்டுப் பெண்களின் மீது நீங்கள் அக்கறை உள்ளவர்களாய் இருப்பதனால் .. இந்தப் பதிவின் தகவலை அனைவருக்கும் கொண்டு சேருங்கள் !

Comments

James Henry said…
Great post I would like to thank you for the efforts you have made in writing for picme login and knowledgeable article.

Popular posts from this blog

Bharat Sevak Samaj is the National Development Agency, Established in 1952 by Planning Commission, Government of India -திறன் சான்றிதழ்