'சாலை விதிகளை பின்பற்றி, விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும்,' என போக்குவரத்து வார விழாவில், அதிகாரிகள் பொதுமக்களிடையே வலியுறுத்தி வருகின்றனர். சாலை விதி மீறல் அபராத தொகை எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகளவு பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் மதுபானம் குடித்து விட்டு வாகனங்கள் இயக்குதல்; ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் இயக்குதல், பஸ்சில் தொங்கல் பயணம் போன்ற பல்வேறு விதிமுறைகள் மீறப்படுவதால், விபத்துகள் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்; விபத்துகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து வார விழாவில், விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் என மக்களிடம் அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Comments