பேக்கேஜிங் குடிநீர் சுத்தமானது என்று கணினி மற்றும் மொபைல் மூலமமாக பரிசோதிக்க முடியும்
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு பாதுகாப்பான குடிநீர்!
நீங்கள் வெளியில் பயணம் செல்லும் போது தண்ணீர் வாங்க வேண்டும் என்ற சூழ்நிலைக்குத் நாம் தள்ளபடுகிறோம்
இன்றைய உலகில் பல வகையான தண்ணி பாட்டில் கிடைக்கிறது,அவைகள் அரசு அனுமதி பெற்றது என்று எவ்வாறு நாம் சொல்ல முடியும்
பேக்கேஜிங் குடிநீர் பற்றிய தகவல்கள் நுகர்வோர் இன்னும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்
பேக்கேஜிங் குடிநீர் பாதுகாப்பானதாகவும் மற்றும் உயர் தரத்திலும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க்கும் உரிமை நமக்கு உண்டு .
பேக்கேஜிங் குடிநீர் பாதுகாப்பானதாகவும் ,சுத்தமாகவும் இருக்கிறதா? என்று நம்முடைய கணினி மற்றும் மொபைல் மூலமமாக சரிபார்க்க முடியும் என்று உணவு பாதுகாப்பு சட்டம் அறிவுறுத்துகிறது
பேக்கேஜிங் குடிநீர் தரமானதாக உள்ளதா என்று எப்படி பரிசோதிப்பது?
1.நீங்கள் வாட்டர் பாட்டில் அல்லது பாக்கெட்டில் உள்ள தண்ணீர் வாங்கியவுடன் அதில் உள்ள Licence No அல்லது lic.No என்று இருக்கும் பார்க்கவும்.
2.பிறகு நீங்கள் இந்த link-யை கிளிக் செய்யுங்கள் https://safewater.fssai.gov.in/CleanWater/home அதில் Check Quality Of Water with Licence No./BIS No. on the pack of bottle.என்று வலது பக்கத்தில் இருக்கும் அதற்கு கீழ் ஒரு பாக்ஸ் இருக்கும் அதில் கிளிக் செய்தால் இரண்டு வகையான தெரிவுகள் இருக்கும் அதில் By Licence Number என்று இருபதை கிளிக் செய்யவும்.
3.பிறகு அதற்கு கீழ் ஒரு box வரும் அதில் நீங்கள் வாங்கிய பேக்கேஜிங் குடிநீர் கவரில் இருக்கும் Licence Number அல்லது lic.No யை டைப் செய்யவும்.
4.அதற்கு கீழ் Search Result என்று எல்லா விவரங்கள் வந்து விடும்.
வலது [பக்கத்தில் View Report என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் பெற்று விடலாம்.
Comments