புகையிலை எந்த வடிவில் பயயன்படுதினாலும் உயிர்கொல்லியே...!
புகையிலை எந்த வடிவில் பயயன்படுதினாலும் உயிர்கொல்லியே...!
100% புகையிலையில்லா சுற்றுசூழலை உருவாக்குவோம்.புகையிலையில் அடங்கியுள்ள நச்சு பொருட்கள் கீழ் உள்ள படத்தில் பார்க்கலாம்.
புகையிலை வேண்டாம் ஏன்?
புகையிலை பயன்பதுவதினால் இந்தியாவில் மட்டும் 30 நிமிடத்திற்கு ஒருவர் இறந்து கொண்டு இருக்கிறார்.புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களோடு ஒப்பிடுகையில் புகைபிடிப்போர் வாழ்நாளில் 22 முதல் 26 ஆண்டுகளை இழக்கின்றனர்.
புகைபிடிப்போர் விடும் புகை அவர்களை மட்டும் அல்ல அவர் குடும்பம் மற்றும் அருகில் இருபவர்களையும் பாதிக்கும்.
நல்ல நண்பன் யார்?
1.உங்களை புகையிலை பயன்படுத்த வற்புறுத்தும் நண்பர்களை உற்ற நண்பன் என்று எண்ணி ஏமாற வேண்டாம்.2.உங்களை புகையிலைக்கு அடிமையாக்கி புற்றுநோய்க்கு ஆளாக்குபவர்கள் உண்மையான நண்பர்களாக இருக்க முடியாது.
3.அப்படி நீங்கள் அவர்களை நல்ல நண்பர்கள் என்று எண்ணினால் புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கு வலியுருதுங்கள் அல்லது உதவுங்கள்.
4.புகையிலை பழக்கத்தை தூண்டும் சூழ்நிலைகளை அறவே தவிர்க்க வேண்டும்.
அத்தகைய சூழ்நிலைக்கு ஆளாக நேரிட்டால் "வேண்டாம்" என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்
"வேண்டாம்" என்று சொல்வது எப்படி?
1. முதலாவதாக அவர்களுடைய முகத்தையை அல்லது கண்களை நேருக்கு நேராக பார்க்கவும்.2.பிறகு வேண்டாம் என்று தெளிவாக அழுத்தமாக சொல்லவும்.
3.தொடர்ந்து உங்களை வற்புறுத்தினால் அந்த இடத்தை விட்டு விலகி செல்லுங்கள்.
உண்மையான நண்பர்களாக இருந்தால் உங்கள் நட்பை அவர்கள் தொடர்வார்கள்.எனவே நட்புக்காக புகையிலைக்கு அடிமையாக தேவை இல்லை.
சட்டப்பூர்வ எச்சரிக்கை
- 1.பொது இடங்களில் புகைபிடிப்பது சட்டப்படியான குற்றமாகும் (COPTA பிரிவு 4)
- 2.புகையிலை பொருட்களை நேரிடையாகவோ ,மறைமுகமாகவோ விளம்பரம் செய்வது குற்றமாகும். (COPTA பிரிவு 5)
- 3.18 வயதிற்கு உட்பட்டவர்கள் புகையிலை பொருட்களை வாங்குவதும் , விற்பனை செய்வதும் குற்றமாகும் (COPTA பிரிவு 6a).
- 4.கல்வி நிறுவனங்கள் சுற்றி 100 மீட்டர் சுற்றளவிற்கு புகையிலை விற்பது குற்றமாகும் (COPTA பிரிவு 6b).
- 5.மெல்லும் வகை புகையிலையை தயாரிப்பது
மெல்லும் வகை புகையிலையை தயாரிப்பது ,தேக்கி வைப்பது , விநியோகிப்பது மற்றும் விற்பது சட்டபடி குற்றமாகும்.(FSSA பிரிவு 2.3.4)
சட்ட மீறல்களை பதிவுசெய்ய...
பதிவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.
புகையிலை பழக்கத்தை நிறுத்தினால் பல நன்மைகள் அடையலாம்
நேரம் | நன்மைகள் |
நிறுத்திய 20 நிமிடங்களில்
|
உங்கள் இரத்த அழுத்தம் நாடித்துடிப்பு சீராகிறது.
|
நிறுத்திய 8 மணி நேரத்தில்
|
கார்பன் மோனாக்சைடு நம் உடலைவிட்டு வெளியேறுகிறது.
|
நிறுத்திய 24 மணி நேரத்தில்
|
மாரடைப்பு வரும் அபாயம் குறைகிறது .நுரையீரலிருந்து சளி மற்றும் இதர கழிவுகள் வெளியேறுகிறது.
|
நிறுத்திய 48 மணி நேரத்தில்
|
நிக்கோடின் நம் உடலை விட்டு வெளியேறிவிடும்.ருசி ,நுகரும் திறன் அதிகரிக்கேறது.சுவாசம் சுலபமாகிறது. சக்தி அதிகரிக்கிறது.
|
நிறுத்திய 2 முதல் 12 வாரங்களில்
|
இரத்த ஓட்டம் சீராகிறது.
|
நிறுத்திய 3 முதல் 9 மாதங்களில்
|
சுவாச கோளாறு,இருமல் போன்றவை நீங்குகிறது.
|
நிறுத்திய 5 வருடங்களுக்கு பின்
|
இருதய நோய்க்கான வாய்ப்பு 50% குறைகிறது.
|
நிறுத்திய 10 வருடங்களுக்கு பின்
|
நுரையீரல் புற்றுநோய் வாய்ப்பு 50% குறைகிறது.
|
நிறுத்திய 15 வருடங்களுக்கு பின்
|
இருதய நோய்க்கான வாய்ப்பு 100% குறைகிறது.
|
உங்கள் பெற்றோர் , நண்பர்கள் ,மற்றும் உறவினர்கள் புகையிலை பழக்கத்திலிருந்து வெளிவர அறிவுறுத்துங்கள்.
இலவச ஆலோசனைக்கு அழையுங்கள்044-2235 1616(Direct)
044-2235 0131(Extn.189)
புற்றுநோய் மருத்துவமனை (WIA)
அடையாறு ,சென்னை - 36.
மேலும் புகையிலை பற்றி தெரிந்து கொள்ள:
புகையிலை பழக்கத்தை விட்டுவிட விரும்புகிறீர்களா? இங்கு அழுத்தவும்.
Comments