புகையிலை பழக்கத்தை விட்டுவிட விரும்புகிறீர்களா?
புகையிலை பழக்கத்தை விட்டுவிட விரும்புகிறீர்களா?
தயாராகுங்கள்.....இப்பழக்கத்தை மொத்தமாக நிறுத்தினால் மிக சுலபமாக நிறுத்தி விடலாம்.
புகையிலை பழக்கத்தை நிருதுவதினால் ஏற்படும் சிரமங்களை பற்றி கவலைபடுிறீர்களா? புகையிலை பழக்கத்தினால் வரகூடிய புற்றுநோய் ,இருதயநோய் ,பக்கவாதம் போன்ற நோய்களோடு ஒப்பிடும்போது , புகையிலை பழக்கத்தை நிருதுவதினால் ஏற்படும் சிரமம் 1. மிக குறைவு ,2.செலவில்லாதது 3.வலி இல்லாததுசிரமங்களும் சமாளிக்கும் வழிமுறைகளும் :
அறிகுறிகள்
உடல் அளவில் அடிமையாதல்:- 1.புகையிலை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம்
- 2.தூக்கமின்மை.
- 3.மலச்சிக்கல்
- 4.உடல் எடை கூடுதல்
-
மனதளவில் அடிமையாதல்:
- 1.பிறர் பயன்படுத்தும் போது தூன்டப்படுதல்
- 2.பதற்றம்
- 3.மன அழுத்தம்
- 4.கவன குறைவு
- 5.அன்றாட வேலைகளுடன் தொடர்புபடுத்தி வைத்தல்
-
சமுக அளவில் அடிமையாதல்:
- 1.மறுப்பு சோழ இயலாமை
- 2.சமூக நிகழ்ச்சியில் நண்பர்களின் வலியுறுத்தல்.
சமாளிக்கும் வகைகள்
- எண்ணத்தை 3லிருத்து 5 நிமிடம் தள்ளி போடவேண்டும்
- கவனத்தை திசை திருப்ப வேண்டும்
- நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
- மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்
- காபி, தேநீர் போன்றவற்றை மாலை 6 மணிக்கு மேல் தவிர்க்க வேண்டும்
- நார் சத்து உள்ள உணவுப்பொருட்களை உண்ண வேண்டும்
- கொழுப்பு சத்து உள்ள உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்
- தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
- புகை பிடிபவர்கள் , புகை பிடிக்கும் பகுதிகள் மற்றும் பிறர் விடும் புகையை சுவாசிக்காமல் தவிர்க்க வேண்டும்
- நல்ல விசயங்களையும் , நிருதுவதினால் ஏற்படும் பயன்களையும் எண்ணி பார்க்க வேண்டும்
- "வேண்டாம் எனக்கு புகையிலை" என்று தெளிவாக ,அழுத்தமாக நேருக்கு நேராக பார்த்து சொல்ல கற்று கொள்ள வேண்டும்.
- புகையிலை பயன்படுத்த தூண்டும் சூழ்நிலைகளை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை மதியம் 1.௦௦ மணியளவில் நடைபெறும் இலவச வாய் பரிசோதனை மற்றும் புகையிலை விடுதலை அடைதளுக்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெறுங்கள்.
புகையிலை கட்டுப்பாடு வள ஆதர மையம்
38, சர்தார் பட்டேல் ரோடு, அடையாறு , சென்னை- 600 036.
38, சர்தார் பட்டேல் ரோடு, அடையாறு , சென்னை- 600 036.
மேலும் புகையிலை பற்றி தெரிந்து கொள்ள:
புகையிலை எந்த வடிவில் பயயன்படுதினாலும் உயிர்கொல்லியே...! இங்கு அழுத்தவும்.
Comments