ஐஆர்சிடிசி இணையத்தில் மாதம் 12 முறை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்
செல்போன், கணினி பயன்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள நிலவரப்படி சுமார் 68 சதவீதம் பேர் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். மீதமுள்ளோர் முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
தற்போது ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் ஒருவர் ஒரு மாதத்தில் 6 முறை மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இந்த எண்ணிக்கை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இனி ஒரு மாதத்துக்கு 12 முறை டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இதற்கு, ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த புதிய முறை உடனடியாக அமலுக்கு வருகிறது.
Comments