இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பை கரைக்க ஈஸியான வழி
அர்த்தகடி சக்ராசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பில் உள்ள கொழுப்பை கரைக்கலாம்.
எப்படி செய்ய வேண்டும்?
முதலில் நின்று கொண்டு உடலை வலது பக்கமாக வளைத்து ஒரு கை வலது முழங்கால் தொடும்படி மற்றொரு கை தலையின் காதை ஒட்டி படத்தில் காட்டியவாறு, இருபுறமும் 1 நிமிடம் செய்ய வேண்டும்.
பின் கைகளை மேலே உயர்த்தும் போது உள்மூச்சு, சாயும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு மற்றும் நிமிரும் போது உள்மூச்சும் விட வேண்டும்.
பயன்கள்
- முதுகுத்தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கும்.
- பக்கவாட்டு மார்புத்தசைகளில் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.
- இடுப்பு மூட்டுக்கள் வளையும் தன்மை பெறும்.
- நுரையீரல்களின் கொள்ளளவு அதிகரிக்கும்.
- இடுப்பைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரையும்.
- உடல் மற்றும் பாதத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
Comments