அம்மாடியோவ்: பூண்டை காதில் வைத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

உணவு வகையில் சேர்க்கப்படும் பூண்டு பல்வேறு மருத்துவ பலன்களை கொண்ட பொருளாகும்.
பூண்டை காதில் வைத்து கொள்வதாலும், சரியான அளவில் சாப்பிடுவதாலும் பல்வேறு வகையான நோய்கள் குணமாகின்றன.
  • சிறு துண்டு பூண்டை எடுத்து காதில் வைத்து கொண்டால் காது வலி, உடல் வலி, தலைவலி, காய்ச்சல், வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
  • கடும் இருமல் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், பூண்டு, தேன் கலந்து அதை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் இருமல் பிரச்சனை அகலும்.
  • பூண்டு நமது இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து, கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும், ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. இதய கோளாறுகள் ஏற்படாமல் இருக்க தினமும் காலையில் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் நல்லது.
  • பூண்டானது நம்முடைய உயர் ரத்த அழுத்தத்தை சரி செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு பற்களை சாப்பிடலாம்.
  • படர்தாமரை, கால் அரிப்பு போன்றவற்றுக்கு பூண்டு சிறந்த மருந்தாகும். பாதிப்பு உள்ள இடத்தில் பூண்டு எண்ணெய்யை தடவினால் விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.
  • பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை கீல்வாதத்தால் ஏற்படும் வீக்கத்தை தடுக்கிறது. கீல்வாத வலியிலிருந்து விடுபட தினமும் காலை வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிட வேண்டும்.
  • பூண்டில் இருக்கும் வலி நிவாரணி தன்மைகள் பல் வலியை போக்கும் திறன் கொண்டதாகும். பல்வலி சமயத்தில் பூண்டு துண்டு அல்லது பூண்டு எண்ணெயை வலி இருக்கும் இடத்தில் வைத்தால் உடனடி பலன் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

Bharat Sevak Samaj is the National Development Agency, Established in 1952 by Planning Commission, Government of India -திறன் சான்றிதழ்