நூறு சதவீத தீர்வு: செம்பட்டை நிற முடியை கறுப்பாக மாற்றலாம்
செம்பட்டை நிறமுள்ள முடியை கறுப்பாக மாற்றுவதுடன், முடி உதிர்வை தடுத்து, வழுக்கையில் முடியின் வளர்ச்சியை தூண்டுவதற்கு இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான எண்ணெய் இதோ..
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் சாறு - 50 மிலி
- கற்றாழை சாறு - 50 மிலி
- வெற்றிலை சாறு - 50 மிலி
- சின்ன வெங்காயச் சாறு - 50 மிலி
- கருவேப்பிலைச்சாறு - 50 மிலி
- மருதாணிச் சாறு - 50 மிலி
- மிளகு - 20 கிராம்
செய்முறை
முதலில் நெல்லிக்காய், வெற்றிலை போன்றவற்றை தனித்தனியாக இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் எண்ணெய், மிளகு தவிர மற்ற அனைத்து சாற்றையும் ஒன்றாக கலந்து, அதை அடுப்பில் வைத்து பாதியாக வற்ற வைக்க வேண்டும்.
பின்னர் அதில் தேங்காய் எண்ணெய்யை கலந்து கொதிக்க வைத்து, மிளகை தட்டிப்போட்டு இறக்கி, அந்த எண்ணெய்யை பதப்படுத்தி வைத்து கொண்டு தலையில் தொடர்ந்து தேய்த்து வர வேண்டும்.
பலன்கள்
- முடி உதிர்தல் நிற்கும்.
- கண்பார்வை தெளிவாகும்.
- தலைவலி குணமாகும்.
- உடல்சூடு, மூக்கடைப்பு, கப வியாதிகள், இழுப்பு, இருமல் கட்டுப்படும்.
- வழுக்கை தலையிலும் முடி வளரும்.
- 100% செம்பட்டை முடி கறுப்பாக மாறும்.
Comments